பூச்சிக்கொல்லி பாட்டில்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு பூச்சிக்கொல்லி பாட்டில்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், உரம் விலை உயர்வை கண்டித்தும், உரம் விலையை குறைக்க வலியுறுத்தியும் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
பூச்சிக்கொல்லி மருந்து பாட்டில்களை தோரணமாக கட்டி வைத்தபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பங்கேற்றனர்.
உரம் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், உரம் விலையை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.