பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம் போடியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-15 16:36 GMT
தேனி: 

தேனி மாவட்டம் போடி பகுதியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது.

 இதில் போடி நகராட்சிக்கு உட்பட்ட 16-வது வார்டு சாமியார் தெருவில் வீடுகளுக்குள் கழிவு நீர் புகுந்தது. 

இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். 

இந்த நிலையில் நேற்று அப்பகுதி பொதுமக்கள் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யவேண்டும் என்று திருமலாபுரம் சாலையில் திடீரென்று மறியலில் ஈடுபட்டனர். 

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

இதுகுறித்து தகவலறிந்த நகராட்சி பொறியாளர் குணசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அதில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். 

இதையடுத்து மறியலை கைவிட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்