அத்தனூர் அம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவுவிழா

அத்தனூர் அம்மன் கோவில் மண்டலாபிஷேக நிறைவுவிழா

Update: 2021-04-15 15:50 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவில் அருகே உள்ள திருமங்கலத்தில் விநாயகர், அத்தனூர் அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புதியதாக கோவில் அமைக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்றது. நேற்று 48 வது நாள் மண்டலாபிஷேகம் நிறைவு விழா நடைபெற்றது. இதில் திருமங்கலம், ரெட்டிவலசு, கல்லாங்கட்டுவலசு ஆகிய பகுதிகளைச்சேர்ந்த ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் கும்பாபிஷேக விழா குழுவினர் செய்து இருந்தனர். 

மேலும் செய்திகள்