கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.;

Update: 2021-04-15 14:15 GMT
பழனி:
பழனி அருகே கோதைமங்கலம் ஊராட்சி அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பணிகளை செய்து வருகின்றனர். 
இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோதைமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வேலை வழங்குவதில் பாரபட்சம் உள்ளது. 
பணித்தள பொறுப்பாளர்கள் நியமனத்தில் சுழற்சி முறை கடைபிடிக்கப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
சம்பவம் குறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார், ஊராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்களின் புகார் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்