பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-15 14:11 GMT
ஊட்டி

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பெண் துப்புரவு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

துப்புரவு தொழிலாளி

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மிஷனெரிஹில் பகுதியை சேர்ந்த பெண் துப்புரவு தொழிலாளி  ராஜாமணி(வயது 59). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனது தம்பி குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்து வந்தார். மேலும் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பணியாற்றினார்.

இந்த நிலையில் ராஜாமணி நேற்று வழக்கம்போல் அந்த கல்லூரிக்கு  துப்புரவு பணிக்கு சென்றார். பின்னர் வகுப்பறைகள், வளாக பகுதிகளை சுத்தம் செய்தார். தொடர்ந்து என்.சி.சி. மாணவிகள் உடை மாற்றும் அறையை சுத்தம் செய்வதாக கூறிவிட்டு சென்ற அவர், அங்கிருந்து திரும்பி வரவில்லை. 

உடனே அந்த அறைக்கு சென்று சக தொழிலாளிகள் பார்த்தனர். அப்போது ராஜாமணி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.

தற்கொலை

இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசாருக்கு கல்லூரி நிர்வாகம் தகவல் தெரிவித்தது. தொடர்ந்து சம்பவ இடத்துக்கு போலீசார் வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் விசாரணை நடத்தியதில், தனிமையில் இருந்ததால் மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

அதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜாமணி கோவையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊட்டிக்கு திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது உறுதியானது.

மன அழுத்தம்

பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். அப்போது அவர் நான் தனிமையில் வாடுகிறேன் என்றும், தன்னை கவனிக்க ஆளில்லை என்றும் பிறரிடம் கூறி வந்தார். 

இதனால்  மன அழுத்தம் ஏற்பட்டு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்