கும்மிடிப்பூண்டி அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கும்மிடிப்பூண்டி அருகே வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

Update: 2021-04-15 04:19 GMT
கும்மிடிப்பூண்டி, 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 24). இவர் நேற்று முன்தினம் இரவு 10 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்