அய்யஞ்சேரி ஏரியில் பெண் பிணம்

ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி ஏரியில் அடையாளம் தெரியாத பெண் பிணத்தை போலீசார் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.;

Update: 2021-04-15 04:10 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அய்யஞ்சேரி பெரிய ஏரியில் நேற்று முன்தினம் மாலை ஒரு பெண்ணின் உடல் மிதப்பதை பார்த்த அந்த பகுதி மக்கள் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மிதந்து கொண்டிருந்த 45 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை, எதற்காக இங்கு வந்தார் என்பதும் தெரியவில்லை, அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்