கோவையில் நேற்று திடீர் மழை

கோவையில் நேற்று திடீர் மழை பெய்தது.

Update: 2021-04-15 02:33 GMT
கோவை,

கோவையில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதில் குறிப்பாக கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் அதிகபட்சமாக 100 டிகிரி வரை வெயிலின் தாக்கம் இருந்தது. 

அனல் காற்றின் காரணமாக வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மேலும் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர்.இந்த நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. 

திடீரென இரவு 8 மணிக்குமேல் நகரின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தது. கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பு, கணபதி, மணியகாரம்பாளையம், நல்லாம்பாளையம், நியூ சித்தாபுதூர், காந்திபுரம்,

 பாப்பநாயக்கன்பாளையம், வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவானது. 

கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலால் தவித்து வந்த பொதுமக்கள் இந்த மழையால் மகிழ்ச்சியடைந்தனர். அதிலும் குறிப்பாக நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் புத்தாண்டை வரவேற்பதற்காக மழை பெய்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்