ஜலகண்டாபுரம் அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை 108 வலம்புரி சங்காபிஷேகம்

அய்யனாரப்பன் கோவிலில் மண்டல பூஜை

Update: 2021-04-14 22:59 GMT
மேச்சேரி:
ஜலகண்டாபுரம் நாடார் சமுகம் குஞ்சம்மாள் வகையறா பங்காளிகள் குல தெய்வமான அய்யனாரப்பன் சாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை தொடர்ந்து நேற்று 48-வது நாள் மண்டல பூஜை நடந்தது. இதையொட்டி கோவிலில் சிறப்பு யாகம், அய்யனாரப்பனுக்கு 108 வலம்புரி சங்காபிஷேகம், சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்