ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை; வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

Update: 2021-04-14 21:49 GMT
ஈரோடு
ஈரோடு மாநகர் பகுதியில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. உச்சகட்டமாக 110 டிகிரி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாக இரவில் வெப்பம் அதிகமாக காணப்பட்டதால், மக்கள் அவதி அடைந்தார்கள். நேற்று பகலிலும் வெயில் அடித்தது.
இந்த நிலையில் இரவு 10.30 மணி அளவில் ஈரோடு பகுதியில் திடீரென சாரல் மழை பெய்தது. அப்போது இடி-மின்னலுடன் குளிர்ந்த காற்று பலமாக வீசியது. அதைத்தொடர்ந்து 11 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. அதன்பிறகு மீண்டும் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் இரவில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் செய்திகள்