ஈரோடு மாவட்டத்தில் அதிவேகமாக பரவும் தொற்று: புதிய உச்சமாக ஒரே நாளில் 153 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஈரோடு மாவட்டத்தில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருவதால், இந்த ஆண்டின் புதிய உச்சமாக ஒரே நாளில் 153 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-04-14 21:31 GMT
ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் அதிவேகமாக கொரோனா தொற்று பரவி வருவதால், இந்த ஆண்டின் புதிய உச்சமாக ஒரே நாளில் 153 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய உச்சம்
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. கடந்த 2 வாரங்களாக புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். பொதுஇடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.இந்தநிலையில் மாவட்டத்தில் நேற்று புதிதாக 153 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டார்கள். இது இந்த ஆண்டின் புதிய உச்சமாகும். ஒரே நாளில் அதிகமானோர் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தது. எனவே அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
707 பேருக்கு சிகிச்சை
மாவட்டத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 293 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 15 ஆயிரத்து 435 பேர் நோய் தொற்றில் இருந்து மீண்டு உள்ளார்கள். நேற்று மட்டும் 74 பேர் குணமடைந்தார்கள். தற்போதைய நிலவரப்படி 707 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. மற்றவர்கள் வீட்டு தனிமையிலேயே இருந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 151 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்கள்.
நோய் தொற்று பரவல் வேகமெடுத்து வருவதால், பொதுமக்கள் நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், தனிநபர் இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்