தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு
தமிழ்ப்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
சிவகாசி,
சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் தமிழ்ப்புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
முன்னதாக அம்மனுக்கு அதிகாலை முதல் பால், பன்னீர், தேன், விபூதி, சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் உள்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அரசு கூறிய கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி திரளான பக்தர்கள் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் உதவி ஆணையர் கருணாகரன், ராமமூர்த்தி பூசாரி, மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவில், பெரிய மாரியம்மன் கோவில், சந்தனமாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
புத்தாண்டையொட்டி சிவகாசி விஸ்வநாதசுவாமி கோவிலில் காலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கிருமிநாசினி வழங்கப்பட்டது. குறிப்பிட்ட அளவு பக்தர்கள் மட்டுமே கோவி லுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதே போல் பெருமாள் கோவில், ஐயப்பன் கோவில், முருகன் கோவில், பேச்சியம்மன் கோவில்களில் தமிழ் புத்தாண்டை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. திருத்தங்கலில் உள்ள சக்திமாரியம்மன் கோவில், பெருமாள் கோவில், கருமாரியம்மன் கோவில்களில் புத்தாண்டையொட்டி பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.