திருச்சி மாவட்டத்தில் புதிதாக 216 பேருக்கு கொரோனா

திருச்சி மாவட்டத்தில் நேற்று 216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-14 21:12 GMT

திருச்சி, ஏப்.15-
திருச்சி மாவட்டத்தில் நேற்று 216 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 738 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் 1,502 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 49 பேர் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்