சிறுகனூர் அருகே உர மூட்டை சரிந்து விழுந்து தொழிலாளி பலி

சிறுகனூர் அருகே உர மூட்டை சரிந்து விழுந்து தொழிலாளி பலியானார்.

Update: 2021-04-14 21:12 GMT

சமயபுரம், ஏப்.15-
சிறுகனூர் அருகே உள்ள தச்சங்குறிச்சிக்கு நெல்லையில் இருந்து லாரியில் உர மூட்டைகளை ஏற்றி கொண்டு வந்தனர். அப்போது, உர மூட்டைகளை இறக்க நஞ்சை சங்கேந்தி காலனிதெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி பாண்டியன் (வயது 40) லாரியின் பின்பகுதியில் அமர்ந்து வந்தார். தச்சங்குறிச்சிக்கு வந்ததும் லாரியை நிறுத்திவிட்டு, அதன் டிரைவர் முத்துக்குமார்(33) பின்னால் ஏறி பார்த்த போது, உர மூட்டைகள் சரிந்து விழுந்ததில் பாண்டியன் மூச்சுத்திணறி இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிைரவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்