அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாமி தரிசனம்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-04-14 20:51 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர், 
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு அமைச்சரும் ராஜபாளையம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரான ராஜேந்திரபாலாஜி, அ.தி.மு.க. வேட்பாளர்கள் ரவிச்சந்திரன், மான்ராஜ், லட்சுமி கணேசன் மற்றும் கட்சி நிர்வாகிகளும் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்