ராஜபாளையம்,
ராஜபாளையம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று மாலை திடீரென மழை பெய்ய தொடங்கியது. ராஜபாளையம் நகர் பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலை அய்யனார் கோவில், சத்திரப்பட்டி, சங்கரபாண்டியபுரம், சம்சிகாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் ½ மணி நேரம் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.