மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளித்த பொதுமக்கள் போலீசார் அபராதம் விதித்தனர்

கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளித்தனர்.

Update: 2021-04-14 20:27 GMT
நெல்லை:
கொரோனா பரவலை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி நெல்லை தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் குளித்தனர்.

கொரோனா பரவல்

நெல்லை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் திருவிழா நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது. கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற அனுமதிக்கப்பட்டது. கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகளும், அபிஷேக அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் புனித நீராடுவதற்கும், குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

அபராதம் விதித்தனர்

ஆனால் இந்த தடையை மீறி பாபநாசத்தில் தொடங்கி சேரன்மாதேவி, நெல்லை, சீவலப்பேரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தாமிரபரணி ஆற்றில் பொதுமக்கள் வழக்கம் போல் குளித்தனர். 

மதியத்திற்கு பிறகு நெல்லை மாநகர பகுதியில் போலீசார் தாமிரபரணி ஆற்றில் குளித்த பொதுமக்களுக்கும், முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கும் அபராதம் விதித்தனர்.

மேலும் செய்திகள்