வயது முதிர்வு காரணமாக இறந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை
வயது முதிர்வு காரணமாக இறந்த போலீஸ் மோப்ப நாய்க்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.;
நெல்லை:
நெல்லை மாநகர போலீஸ் துறையில் வெடிகுண்டு தடுப்பு பிரிவில் பிராவோ என்ற மோப்ப நாய் பணியாற்றி வந்தது. இந்த நாய் வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தது.
இதையடுத்து மோப்ப நாய்க்கு போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சீனிவாசன் மற்றும் மகேஷ் குமார் ஆகியோர் மோப்ப நாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 30 குண்டுகள் முழங்க உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.