மாணவி பாலியல் பலாத்காரம்: போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.;
நாங்குநேரி:
மூலைக்கரைப்பட்டி அருகே அ.சாத்தான்குளத்தை அடுத்த அச்சம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி (வயது 30). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயதான சிறுமியை சுடலைமணி ஏமாற்றி காட்டு பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுடலைமணியை கைது செய்தனர்.