கஞ்சா விற்ற 3 பேர் சிக்கினர்

கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-04-14 19:05 GMT
மதுரை
மதுரை அண்ணாநகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வண்டியூர் பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்ற போது, அங்கிருந்த 3 பேர் தப்பி ஓட முயன்றனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, வண்டியூர் நேதாஜி நகரை சேர்ந்த அய்யங்காளை(வயது 29), காஞ்சிவானம், சூரியபிரகாஷ் என்பதும், அவர்கள் கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 3 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்