மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பலி
மாடியில் இருந்து கீழே விழுந்தவர் பலியானார்.
காரைக்குடி,
காரைக்குடி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் உள்ள எம்.ஜி.ஆர். தெருவில் வசித்தவர் சேவுகன் (வயது 55). இவர் கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. சம்பவத்தன்று இரவு இவர் இலுப்பக்குடி சாலையில் உள்ள சமுதாய கூடத்தின் மாடிப்பகுதியில் படுத்துள்ளார். நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத் திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காரைக்குடி அழகப்பாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.