ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு போலீசார் மற்றும் அந்தந்த பகுதி போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் மதுவிற்பனை செய்த 21 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 317 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் ராமேசுவரம் அருகே காட்டிற்குள் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 172 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து ராமேசுவரம் சுனாமி குடியிருப்பு நாகையா மகன் தர்மராஜ் (வயது30) என்பவரை கைது செய்தனர்.