தடையை மீறி கோவில் திருவிழா

பரமக்குடி அருகே தடையை மீறி கோவில் திருவிழா நடந்தது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2021-04-14 17:47 GMT
பரமக்குடி, 
பரமக்குடி அருகே தடையை மீறி கோவில் திருவிழா நடந்தது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பங்குனி திருவிழா
பரமக்குடி தாலுகா சத்திரக்குடி அருகே காமன் கோட்டையில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். 
தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவில்களில் திருவிழா நடத்த கூடாது என்றும், பொதுமக்கள் அதிக அளவில் கூடக்கூடாது என்றும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
வழக்குப்பதிவு
ஆனால் அந்த தடையை மீறி கோவில் திருவிழா நடத்தியதாக காமன் கோட்டையை சேர்ந்த சரவணன், கருப்பையா மற்றும் கோவில் நிர்வாகிகள் உள்பட 12 பேர் மீது கிராம நிர்வாக அதிகாரி தாமரைக்கனி கொடுத்த புகாரின் பேரில் சத்திரக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்