செட்டித்தாங்கல் வாரச்சந்தையில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம் வருவாய்த் துறையினர் நடவடிக்கை
செட்டித்தாங்கல் வாரச்சந்தையில் முககவசம் அணியாத 10 பேருக்கு அபராதம் வருவாய்த் துறையினர் நடவடிக்கை
திருக்கோவிலூர்
திருக்கோவிலூர் வட்டம் செட்டிதாங்கல் கிராமத்தில் நடைபெற்ற வாரச்சந்தையில் அளவுக்கதிகமான கூட்டம் கூடியதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிரண்குராலா உத்தரவின் பேரில் திருக்கோவிலூர் தாசில்தார் சிவசங்கரன் தலைமையில், தேர்தல் துணை தாசில்தார் பாஸ்கரன் மற்றும் கிராம உதவியாளர்களை கொண்ட குழுவினர் செட்டிதாங்கல் கிராமத்தில் உள்ள வாரச்சந்தையில் சோதனை நடத்தினர். இதில் முககவசம் அணியாத வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் 10 பேரிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூல் செய்தனர். மேலும் உருமாறிய கொரோனா பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.