பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

Update: 2021-04-14 16:12 GMT
பொங்கலூர
பொங்கலூர் மூகாம்பிகை நகரை சேர்ந்த பரமேஸ்வரன். இவருடைய  மனைவி ஜெயலட்சுமி  இவர் கடந்த மாதம் 20ந்தேதி கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வலசுப்பாளையம் பிரிவு அருகே ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள் அவரை கீழே தள்ளி 5½ பவுன் தாலிக்கொடியை பறித்துச்சென்றனர். இதுகுறித்து அவினாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் அவினாசிபாளையம் சுங்கம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சந்தேகத்திற்கிடமான  ஒரு நபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் திருநெல்வேலியை சேர்ந்த சங்கரபாண்டியன் மகன் பசுபதிஎன்பது தெரியவந்தது. கடந்த மாதம் ஜெயலட்சுமியின் நகையை பறித்த நபர் என்பதும் தெரிய வந்தது. பசுபதியை கைது செய்த போலீசார் நேற்றுகாலை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பசுபதியிடமிருந்து 2 பவுன் நகையையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.ஏற்கனவே இந்த வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்த பிரேம்குமார்  என்ற நபரை கைது செய்து அவரிடம் இருந்து 3½ பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
=============

மேலும் செய்திகள்