ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி;
அன்னூர்
கோவையை அடுத்த அன்னூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வங்கி உள்ளது. இதன் அருகிலேயே ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று காலை இந்த மையத்தில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் அப்பகுதி மக்கள் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளனர்.
அப்போது அங்கிருந்த ஏ.டி.எம்.எந்திரத்தின் கீழ் பகுதியில் சிறிதளவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் இதுகுறித்து அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சேதமடைந்து இருந்த அந்த ஏ.டி.எம்.எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.
அதில் சிவப்பு சட்டை அணிந்த மர்ம நபர் ஒருவர் எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது. தெரியவந்தது.
ஆனால் அதனை முழுமையாக உடைக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டு சென்றதும் தெரியவந்தது.
இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இதுகுறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.