அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல்
போடி, பெரியகுளத்தில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.;
தேனி :
தேனி மாவட்டம் போடி நகர அ.தி.மு.க. சார்பில் போடி தேவர் சிலை அருகில் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் தர்ப்பூசணி பழங்களை வழங்கினார்.
விழாவில் ஜக்கையன் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் சையதுகான், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரிதா நடேஷ், தேனி ஒன்றிய செயலாளர் கணேசன், போடி ஒன்றிய செயலாளர் சற்குணம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பெரியகுளத்தில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு அ.தி.மு.க. சார்பில் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ரவீந்திரநாத் எம்.பி. தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் தேனி ஆவின் தலைவர் ராஜா, நகர செயலாளர் ராதா, கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அன்பு மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நீர்மோர் பந்தலில் தர்ப்பூசணி பழம், இளநீர் ஆகியவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.