வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு
வேளாங்கண்ணி அருகே டிராக்டர் மோதி பெண் சாவு.
வேளாங்கண்ணி,
வேளாங்கண்ணி போலீஸ் சரகம் தெற்கு பொய்கைநல்லூர் பரவை ஒம் சக்தி கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி அமுதா(வயது 37). இட்லி வியாபாரம் செய்து வந்த இவர் நேற்று காலையில் வழக்கம்போல தனது வீட்டில் இருந்து வியாபாரத்திற்காக மொபட்டில் அக்கரைபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வடக்கு பொய்கைநல்லூரில் இருந்து எதிரே வந்த டிராக்டர் திடீரென அமுதா ஓட்டிவந்த மொபட் மீது மோதியது. இதில் அவர் மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் டிராக்டர் சக்கரம் ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனர். விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவான டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.