குன்னூர்
நீலகிரி மாவட்டம் 65 சதவீத வனப்பகுதிகளை கொண்டது. இதனால் உயிர்சூழல் மண்டலமாக திகழ்கிறது. இங்குள்ள வனப்பகுதிகளில் அரிய வகை விலங்கினங்களும், பறவையினங்களும் காணப்படுகின்றன. இந்த நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் அரிய வகை இருவாச்சி பறவை சிறகடித்து திரிகிறது.
இந்த பறவையின் தலைப்பகுதி மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும், உடல் பகுதி கருப்பு மற்றும் வெள்ளை நிறத்திலும் காட்சியளிக்கிறது. இது பறக்கும்போது ஹெலிகாப்டர் பறக்கும்போது ஏற்படும் சத்தம் எழும் என்று கூறப்படுகிறது. இந்த அரிய வகை இருவாச்சி பறவையை உள்ளூர் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.