மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
உடுமலை மாரியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி பழங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை
உடுமலை மாரியம்மன் கோவிலில், தமிழ் புத்தாண்டையொட்டி பழங்கள் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு பூஜை
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் நேற்று தமிழ்புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மாரியம்மன் முன்பு வரிசையாக தட்டுகளில் பழங்கள் வைக்கப்பட்டிருந்தன. மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு மாரியம்மனை வழிபட்டனர். தமிழ்புத்தாண்டு சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர், செயல் அலுவலர் வி.பி.சீனிவாசன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
உடுமலையில் பிரசித்திபெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. பிரசன்ன விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகில் செங்குளம் கரை ஓரம் அமைந்துள்ள உடுமலை திருப்பதி வேங்கடேசப்பெருமாள் கோவிலில் தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. வேங்கடேசபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிறப்பு பூஜைகளுக்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.
காளியம்மன் கோவில்
இதேபோன்று உடுமலை பெரியகடை வீதியில் உள்ள நவநீதகிருஷ்ணசாமி கோவில், கல்பனா சாலையில் உள்ள காளியம்மன் கோவில், சிவசக்தி காலனியில் உள்ள ராஜகாளியம்மன்கோவில் உடுமலை நேருவீதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், தில்லை நகரில் உள்ள ரத்தினலிங்கேஸ்வரர் கோவில் ஆனந்த சாயிபாபா கோவில், போடிபட்டியில் உள்ள முருகன் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
---
உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பிரசன்ன விநாயகர் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்ததையும், மாரியம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் கனிகள் முன்பு மாரியம்மன் அருள்பாலித்ததையும், மாரியம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பக்தர்களையும் அடுத்தடுத்த படங்களில் காணலாம்.