சிங்கப்பெருமாள் கோவில் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் சாவு
சிங்கப்பெருமாள் கோவில் அருகே குளத்தில் மூழ்கி ஆட்டோ டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
செங்கல்பட்டு,
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த ஆப்பூர் கிராமத்தில் நண்பர்கள் 6 பேர் ஒன்று கூடி நேற்று முன்தினம் குளத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் குளத்தில் மூழ்கி விட்டார்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த பாலூர் போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு துறையினர் நேற்று முன்தினம் மாலை வரை தேடிவந்த நிலையில் இரவு நேரம் என்பதால் மீட்பு பணிகளை நிறுத்திவிட்டு மீண்டும் நேற்று காலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
குளத்தில் மூழ்கி இறந்த ஆப்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமார் (வயது 49) என்பவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டு பிரோத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பாலூர் சப்-இன்ஸ்பெக்டர் துளசி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.