உப்பிலியபுரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை

உப்பிலியபுரம் பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.;

Update: 2021-04-13 21:38 GMT
உப்பிலியபுரம்,
உப்பிலியபுரம் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் நேற்று மாலை திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் கோடை வெப்பம் சற்று தணிந்தது. உப்பிலியபுரம், வெங்கடாசலபுரம், மாராடி, எரகுடி, ரெட்டியாப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, பச்சபெருமாள்பட்டி ஆகிய பகுதிகளில் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில பகுதிகளில் சாலையில் ஓடிய மழைநீர் வீடுகளுக்குள்ளும் புகுந்ததால் பொது மக்கள் பெரும் அவதியுற்றனர்.

மேலும் செய்திகள்