கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் கல்லூரி மாணவி தற்கொலை

குளச்சல் அருகே கல்லூரி மாணவி கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-04-13 20:20 GMT
குளச்சல்:
குளச்சல் அருகே கல்லூரி மாணவி கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
குளச்சல் அருகே சைமன் காலனியை சேர்ந்தவர் அகஸ்டின், மீனவர். இவர் தற்போது லியோன் நகரில் வசித்து வருகிறார். இவருடைய மகள் மெர்லினா (வயது 19). இவர் அம்மாண்டிவிளை அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். 
அகஸ்டினுக்கு கடந்த சில மாதங்களாக மீன்பிடி தொழிலில் வருமானம் இல்லை. மெர்லினாவுக்கு கல்லூரி கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இதனால் மெர்லினா மனவருத்தத்துடன் இருந்து வந்தார்.
தற்கொலை
இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மெர்லினா மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி குளச்சல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்