கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை கொண்டாட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.

Update: 2021-04-13 20:10 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யுகாதி பண்டிகை கொண்டாடப்பட்டது.
யுகாதி பண்டிகை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கர்நாடக, ஆந்திர மாநில எல்லைகளில் அமைந்துள்ள ஓசூர், பாகலூர், பேரிகை, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, தளி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் நேற்று தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை கொண்டாடினார்கள். 
இதையொட்டி கிருஷ்ணகிரி பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளில் வண்ண கோலமிட்டு, புத்தாடை அணிந்து சாமியை வழிபட்டனர். மேலும் வீடுகளில் ஒப்பட் எனப்படும் இனிப்பு பலகாரம் செய்து, சாமிக்கு படைத்து அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழ்ந்தனர். யுகாதி பண்டிகையையொட்டி கிருஷ்ணகிரி பகுதியில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் பலரும் வண்ண பொடிகளை வீசியும், முகங்களில் தடவியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
ஓசூர்
இதேபோன்று ஓசூர்,சூளகிரி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் நேற்று யுகாதி பண்டிகை உற்சாகமாக கொண்டாடினர். இந்த மக்கள், வீடுகளை சுத்தம் செய்து, வீட்டின் முன்பு வண்ண, வண்ண கோலமிட்டும், வாசலில் மாவிலை தோரணம், வேப்பிலை கட்டி அலங்கரித்தனர். தொடர்ந்து, சாமிக்கு பூஜை செய்து தேங்காய், பழம் மற்றும் உணவு, பலகாரங்களை படைத்து வழிபட்டனர்.
பின்னர் அவர்கள் வேப்பம்பூ, வெல்லம் கலந்த கலவையை, குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம் பக்கத்தி  தினருக்கு வழங்கினர். தொடர்ந்து அவர்கள் குடும்பத்துடன் கோவில்களுக்கு சென்று, முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்