குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.;
கடையம்:
கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூர் கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி மகன் பிரதீப் (வயது 26). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணா சிங், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், பிரதீப்பை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். இதையடுத்து கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் குண்டர் சட்டத்தின் கீழ் பிரதீப்பை கைது செய்து சிறையில் அடைத்தார்.