பாவூர்சத்திரத்தில் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை
பாவூர்சத்திரத்தில் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
கல்லூரி மாணவி
பாவூர்சத்திரம் வி.ஏ.நகர் வடக்கு தெருவில் வசித்து வருபவர் அன்பழகன். பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சோபியா (வயது 22). இவர் ஒரு கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.
சோபியா கடந்த சில நாட்களாகவே உற்சாகம் இழந்து, மிகவும் வருத்தத்துடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்ற சோபியா, வெகுநேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம்பக்கத்தில் அவரை தேடினர்.
தற்கொலை
இதற்கிடையே ஊர் அருகே உள்ள ஒரு கிணற்றின் அருகில், சோபியாவின் செருப்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் ஏட்டு செல்வம், தீயணைப்பு வீரர்கள் ராஜ்குமார், ஆறுமுகம், கார்த்திகேயன், மணிகண்டன் ஆகிய குழுவினர் விரைந்து, வந்து கிணற்றுக்குள் இறங்கி வெகுநேரம் போராடி சோபியா உடலை மீட்டனர்.
பின்னர் சோபியா உடலை பாவூர்சத்திரம் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில், சோபியா கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.