கொரோனா நிவாரணம் கேட்டு மேடை மெல்லிசை கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மேடை மெல்லிசை கலைஞர்கள் மனு கொடுத்தனர்.;

Update:2021-04-14 01:01 IST
கொரோனா நிவாரணம் கேட்டு  மேடை மெல்லிசை கலைஞர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
நெல்லை:

தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞர்கள் சங்கத்தினர் மாநில துணைத்தலைவர் நெல்லை அபூபக்கர் தலைமையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். 

அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாளை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இசை, சுபநிகழ்ச்சிகள், திருவிழா நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் எங்களது தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தின் கீழ் 42 ஆயிரம் இசைக்கலைஞர்கள் 
தமிழகம் முழுவதும் உள்ளனர். ஒவ்வொரு இசைக்கலைஞர் குடும்பத்திலும் 6 பேர் வறுமையில் வாடுகின்றனர்.

எனவே எங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இசை நிகழ்ச்சி நடத்த கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி தர வேண்டும். இல்லை எனில் எங்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். மேடை மெல்லிசை கலைஞர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்