கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது

கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-04-13 18:57 GMT
கரூர்
கரூர் உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நாகேந்திர பிரசாத்(வயது 36). வேன் டிரைவரான இவர் வெங்கமேடு என்.எஸ்.கே.நகர் பகுதி வழியாக சென்று கொண்டு இருந்தபோது இந்திரா நகரைச் சேர்ந்த சூர்யா (23) என்பவர் நாகேந்திர பிரசாத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.300-ஐ பறித்தார். இதுகுறித்து வெங்கமேடு போலீசில் நாகேந்திரபிரசாத் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூரியாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்