தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பேரையூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பேரையூர்,ஏப்.
பேரையூர் அருகே உள்ள கம்மாளப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகன் பிரவீன் (வயது 20). இவர் மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதுபோதையில் வந்த பிரவீனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் அவர் அங்குள்ள மாட்டுக் கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ேசடப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.