கிணற்றுக்குள் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளை உயிருடன் மீட்பு

கிணற்றுக்குள் தவறி விழுந்த ஜல்லிக்கட்டு காளையை உயிருடன் மீட்டனர்

Update: 2021-04-13 18:33 GMT
பொன்னமராவதி, ஏப்.14-
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள மூலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இவரது காளை ஆர்.பாலக்குறிச்சி பகுதிக்கு மேய்ச்சலுக்கு சென்றது.  அப்போது, அங்குள்ள ராமசாமி என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லா 40 அடி ஆழ கிணற்றுக்குள் காளை விழுந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.  அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் ஒருமணிநேரம் போராடி ஜல்லிக்கட்டு காளையை கயிறு கட்டி உயிருடன் மீட்டனர். இதற்கு அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்