மதுரையில் குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்தார்.
மதுரையில் குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
மதுரை,ஏப்.
மதுரையில் குடும்பத்தகராறில் பெண் தீக்குளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற கணவரும் படுகாயம் அடைந்தார்.
பெண் தீக்குளிப்பு
மதுரை பழங்காநத்தம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 42), கம்பி கட்டும் தொழிலாளி. இவரது மனைவி சபரிமணி (36). இவர்களுக்கு பிளஸ்-2 படிக்கும் மகளும், 9-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். நேற்று முன் தினம் இரவு மணிகண்டன் வழக்கம் போல் மதுஅருந்தி விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பின்னர் பிள்ளைகள் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் கணவன், மனைவியும் தூங்க சென்று விட்டனர். திடீரென்று நள்ளிரவு எழுந்த சபரிமணி கணவனை மிரட்ட அங்குள்ள குளியலறையில் சென்று உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார்.
காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம்
இதை பார்த்த மணிகண்டன் அவரை காப்பாற்ற முயன்று அவரும் தீயில் சிக்கி கொண்டார். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் படுத்திருந்த மகளும், மகனும் ஓடி வந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பெற்றோரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவரும் உயிருக்கு போராடி வரும் நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.