சாலையை கடக்க முயன்றவர் ஆட்டோ மோதி பலி
சாலையை கடக்க முயன்றவர் ஆட்டோ மோதி பலியானார்.;
நாகமலைபுதுக்கோட்டை,ஏப்.
மதுரை நாகமலைபுதுக்கோட்டை கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாரத் (வயது 48). இவர் நாகமலை புதுக்கோட்டையில் மதுரை-தேனி தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ மோதியது. இதில் படுகாயமடைந்த பாரத் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.