ராமநாதபுரம் அருகே உள்ள அரிய சாமி நகரைச் சேர்ந்தவர் பாலு என்பவரின் மனைவி ரில்வானாபேகம் (வயது 40),இவர் அவரது இடத்தில் வீடு கட்ட அதே ஊரை சேர்ந்த உறவினரான புகாரி மகன் வாசிம்கான் (40) என்பவரிடம் ஒப்பந்தம் செய்து உள்ளார். இந்த கட்டிட பணி நடந்து கொண்டிருக்கும் போது இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஒப்பந்ததாரர் வாசிம்கான் தனக்கு பேசிய பணத்தை ரில்வானாபேகம் கொடுக்காததால் அவரது கட்டிடத்தில் இருந்து ரூ.4ஆயிரத்து 500 மதிப்புள்ள இரும்பு கம்பிகளை திருடி சென்று விட்டதாக தெரிகிறது. இதுதொடர்பாக ரில்வானாபேகம் கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒப்பந்ததாரர் வாசிம்கானை கைது செய்தனர்.