கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது வழக்கு

கோவில் திருவிழா நடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.;

Update: 2021-04-13 18:06 GMT
பேரையூர்,ஏப்
பேரையூரில் உள்ளது மாரியம்மன், காளியம்மன் கோவில். கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தக் கோவிலில் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 
இந்த நிலையில் அங்கு கோவிலில் அதிகப்படியான கூட்டத்தை கூட்டி வழிபாடு மேற்கொள்ள வழிவகை செய்ததாக கோவில் அறங்காவலர் மற்றும் விழா குழுவினர் மீது போலீசில் கிராம நிர்வாக அலுவலர் பாரதி புகார் செய்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்