நாகையில், கொரோனாவுக்கு 2 பேர் பலி டெல்டாவில் ஒரே நாளில் 350 பேருக்கு தொற்று

நாகையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியானார்கள். டெல்டாவில் ஒரே நாளில் 350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2021-04-13 17:02 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 127 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21 ஆயிரத்து 285 ஆக உயர்ந்தது. தற்போத 1092 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 281பேர் பலியாகி உள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 12 ஆயிரத்து 916 ஆக உயர்ந்தது. மாவட்டத்தில் இதுவரை 116 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தற்போது 697 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

2 பேர் பலி

நாகை மாவட்டத்தில் நேற்று 125 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 59 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 301ஆக உயர்ந்தது. தற்போது 961 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 75 வயது பெண், 70 வயது ஆண் ஆகியோர் பலியானார்கள். இதன் மூலம் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்துள்ளது. டெல்டாவில் ஒரே நாளில் 350 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 131 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

மேலும் செய்திகள்