திருவையாறு பகுதியில் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம்

திருவையாறு பகுதியில் உள்ள கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்து நெல் வீணாகி வருகிறது.

Update: 2021-04-13 16:47 GMT
திருவையாறு, 

தஞ்சை மாவட்டம் திருவையாறு, பூதலூர் தாலுகாவில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 50 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நெல் மூட்டைகள் வார கணக்கில் கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கின்றன. அவற்றை சேமிப்பு கிடங்கிற்கோ, அரவை ஆலைகளுக்கோ அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

இதனால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும், வெயிலிலும் காய்ந்தும் வீணாகி வருகிறது. மேலும் நெல் மூட்டைகள் எடை குறைவு ஏற்படுகிறது. இதற்கான தொகையை பணியாளர்கள் கட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் நெல் மூட்டைகள் சேதம் அடைந்து, நெல் வீணாகி வருகிறது. எனவே நெல் மூட்டைகளை லாரிகள் மூலமாக சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

மேலும் செய்திகள்