மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டாசு வெடித்து 2 வாலிபர்கள் படுகாயம் துக்க நிகழ்ச்சியில் நிகழ்ந்த பரிதாபம்

மூங்கில்துறைப்பட்டு அருகே பட்டாசு வெடித்து 2 வாலிபர்கள் படுகாயம் துக்க நிகழ்ச்சியில் நிகழ்ந்த பரிதாபம்

Update: 2021-04-13 16:36 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பிரம்மகுண்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னப்பையன்(வயது 75). வயது முதிர்வு காரணமாக நேற்று காலை உயிரிழந்தார். அவரது துக்க நிகழ்ச்சியில் அதே பகுதியை சேர்ந்த தொப்பை மகன் சத்யராஜ்(27) மற்றும் தனபால் மகன் தசரதன்(29) ஆகிய இருவரும் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். 
அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு பட்டாசு வெடித்ததில் தசரதனின் வலது கை விரல்கள் சிதறின. வலி தாங்க முடியாமல் அவர் கதறினார். மேலும் அருகில் இருந்த சத்யராஜுக்கும் உடல்முழுவதும் சிராய்ப்பு காயம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். துக்க நிகழ்ச்சியில் பட்டாசு வெடித்தபோது வாலிபர்கள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்