கட்டிட மேஸ்திரி பலி

திருப்பத்தூர் அருகே சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மோதலில் கட்டிட மேஸ்திரி பலியானார்.;

Update: 2021-04-13 16:25 GMT
திருப்பத்தூர்,

மதுரை மாவட்டம் சொக்கிக்குளம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த குருசாமி மகன் ராஜா (வயது 42). கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று காலை மதுரையிலிருந்து காரைக்குடிக்கு வேலைக்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். திருப்பத்தூர் அருகே சுண்ணாம்பிருப்பு-கோட்டையிருப்புக்கு இடையே சென்ற போது எதிரே மதுரை நோக்கி வந்த சரக்கு வாகனம்-மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜா பலியானார். சரக்கு வாகனம் ரோட்டை விட்டு கீழே இறங்கி கருவேல மரத்தில் மோதி நின்றது.
இது குறித்து திருப்பத்தூர் போலீசார் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த நெடுமதுரை வடக்கு தெருவை சேர்ந்த அழகன் மகன் முருகன்(33) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்