தடுப்பூசி போட காலதாமதம்; கன்னிவாடி அரசு மருத்துவமனை முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கன்னிவாடியில் தடுப்பூசி போட காலதாமதம் ஆனதால் ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர்கள் அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-04-13 16:25 GMT
கன்னிவாடி:
திண்டுக்கல் அருகே உள்ள கன்னிவாடி அரசு மருத்துவமனையில் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது. 
இந்தநிலையில் 2-வது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது பேரூராட்சி அலுவலர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடாமல் காமதாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம், துப்புரவு பணியாளர்கள் வாக்குவாதம் செய்தனர். 
பின்னர் ஆத்திரமடைந்த அவர்கள், மருத்துவமனை முன்பு திடீரென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மருத்துவமனை தலைமை டாக்டர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் தடுப்பூசி போடாமலேயே அங்கிருந்து சென்றுவிட்டனர்.

மேலும் செய்திகள்