காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை

Update: 2021-04-13 15:57 GMT
அவினாசி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிவகும்பார் என்பவர் மகன் கோபால் கும்பார்வயது 23 இவர் அவினாசி அருகே கந்தம்பாளையத்தில் தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வேலைக்கு போகாமல் அறையிலேயே தங்கியுள்ளார். அப்போது அவருடன் தங்கியிருந்த சக ஊழியரிடம்தான் ஒரு பெண்ணை காதலித்ததாகவும் அதில் தோல்வி அடைந்ததாகவும் அதனால் மனது சரியில்லை.நான் நாளைமுதல் வேலைக்கு வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவர் தங்கியிருந்த அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்